சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு அடுத்த வய லூர் கிராமத்தில் உள்ள ஓசூ ரம்மன்– வயலாத்தம்மன் கோவிலில் வைகாசிமாத திருவிழா முக்கிய நிகழ்ச் சியாக தேரோட்டம் நடை பெற்றது. முன்னதாக திருமஞ்சனம் செய்து கோவில் முன்பு பெண்கள் பொங்கல் வைத்து படையல் செய்தனர். பின்னர் உற்சவருக்கு அலங்காரம் செய்யப்பட்டு, திருத்தேரில் வைத்தனர். தொடர்ந்து தேரோட்டம் துவங்கியது. பொதுமக்கள், பக்தர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.