Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஷிர்டி பாபா பகுதி -19 ஷிர்டி பாபா பகுதி -21 ஷிர்டி பாபா பகுதி -21
முதல் பக்கம் » ஷிர்டி சாய் பாபா
ஷிர்டி பாபா பகுதி 20
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 மே
2014
02:05

இந்த மருத்துவர் அப்படி ஓடியதற்கு காரணம் உண்டு. சாயி அமர்ந்திருந்த இடத்தில் புன்முறுவலுடன் அமர்ந்திருப்பது யார்? தசரத குமாரனான ராமன் அல்லவா? கையில் வில்லோடும், தலையில் ஒளிவீசும் மகுடத்தோடும், சித்திரத்தில் அலர்ந்த  செந்தாமரை போன்ற முகத்தோடு காட்சி தருகிறானே என் ராமன்? ராமா! எங்கெங்கோ உன்னைத் தேடினேன். கடைசியில் இங்கேயா இருக்கிறாய்? பதினான்கு ஆண்டுகள் கானகத்தில் நடந்த உன் பாதங்கள் நொந்திருக்குமே அப்பா? நான் பிடித்து விடவா? மருத்துவர் சடாரென்று பாபாவின் பாதங்களைப் பிடித்துக் கொண்டார். சரணாகதி தத்துவத்தை நிலை நிறுத்தியவன் அல்லவோ ராமன்? வேடன் குகனானாலும், குரங்கு சுக்ரீவன் ஆனாலும், அரக்கன் விபீஷணன் ஆனாலும் தன் பாதங்களில் சரணடைந்தவர்களுக்கு அடைக்கலம் தரும் வள்ளல் அல்லவா அவன்! காகத்திற்கும் அடைக்கலம் தந்த காகுத்தன். அணிலின் முதுகைப் பரிவோடு தடவி அருள்புரிந்த அண்ணல். உன் பாதங்களில் சரணடைந்த என்னையும் காத்தருள் என் தெய்வமே....!

 இப்படி நினைத்தவாறே நிமிர்ந்து பார்த்த மருத்துவர் திடுக்கிட்டார். சடாரென்று தன் கைகளை உதறினார். அங்கே சிரித்துக் கொண்டே அமர்ந்திருந்தது பாபா தான். ராமனல்ல. அப்படியானால் சற்றுமுன் கண்ட காட்சி பொய்யா? என் கண் என்னை ஏமாற்றியதா? அதுசரி... ஆலயத்தில் இருக்கும் ராமபிரான், எப்படி இங்கே இருப்பான்? மருத்துவருக்குத் தலை சுற்றியது. எதுவும் பேசாமல் விறுவிறுவென்று தான் தங்கியிருந்த இடம் நோக்கிச் சென்றார். பாபா ராமனாக உருமாறியது உண்மையா.. இல்லை பிரமையா? இதன் சூட்சுமத்தை பாபாவே அறிவிக்கட்டும். அதுவரை தான் உணவு உண்ணப் போவதில்லை. யாராவது வற்புறுத்தி அழைத்தாலன்றி, மசூதிக்கும் போகப் போவதில்லை. திடசித்தத்தோடு ஒரு முடிவெடுத்த மருத்துவர் எதையும் சாப்பிடாமல் விரதமிருக்கலானார். மூன்று நாட்கள் கடந்தன. பசி வயிற்றைக் கிள்ளியது. வயிறு என்னைக் கவனி கவனி எனக் குரல் கொடுத்துக்கொண்டே இருந்தது. ஆனாலும், அவர் வயிற்றின் குரலுக்குச் செவிசாய்க்கவில்லை. தாம் உண்ணாவிரதம் இருப்பதையோ, தன் எண்ணங்களையோ யாருக்கும் தெரிவிக்கவுமில்லை. நான்காம் நாள் அதிகாலை அவரைத் தேடி வந்தார், ஷிர்டி அருகே கான்தேஷ் என்னும் கிராமத்தில் வசிக்கும் அவரின் நண்பர்.

அவர் இதுவரை பாபாவை தரிசித்ததில்லை. பாபாவை தரிசிக்க விரும்பிய அவர், மசூதிக்கு வாருங்கள் என்று மருத்துவரைக் கையைப் பிடித்து இழுக்காத குறையாக அழைத்தார். அவர் வற்புறுத்தலால் அவருடன் மசூதி  நோக்கி நடந்தார் மருத்துவர். ராமரும் பாபாவும் ஒன்றுதானா? இந்தக் கேள்விக்கு அன்று விடை கிடைக்குமா? விடை கிடைக்கும் வரை தன் உண்ணாவிரதத்தைத் தொடர வேண்டியதுதான். மருத்துவர் நண்பரோடு மசூதிக்குள் நுழைந்தார். மருத்துவரின் நண்பரைப் பார்த்த பாபா, என்ன, கான்தேஷில்இருந்து வருகிறீர்களே? கான்தேஷில் எல்லோரும் நலமா? என்று அக்கறையோடு விசாரித்தார்! அவர் கான்தேஷிலிருந்து வருகிறார் என்று பாபாவுக்கு எப்படித் தெரிந்தது? நண்பரும் மருத்துவரும் வியப்போடு பாபாவைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பாபா மருத்துவரிடம் பேசலானார்: இப்படிப் பிடிவாதம் பிடித்தால் எப்படி? கடைசியில் உன்னை அழைத்துவர கான்தேஷிலிருந்து ஒருவர் வர வேண்டிஇருக்கிறது! நீயே மருத்துவன். உடலுக்குச் சாப்பாடு எவ்வளவு முக்கியம் என்று உனக்குத் தெரியாதா? வேளாவேளைக்குச் சரிவரச் சாப்பிட வேண்டும் என்று நீயல்லவா மற்றவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்? தான் உண்ணாவிரதம் இருக்கும் விஷயம் பாபாவுக்கு எப்படித் தெரிந்தது? வியப்போடு பாபாவை நிமிர்ந்து பார்த்தார் மருத்துவர். அவரை நோக்கிப் பரிவோடு புன்முறுவல் பூத்தது - பாபாவின் முகமல்ல, ராமனின் திருமுகம்!

மருத்துவரின் விழிகளிலிருந்து கண்ணீர் பெருகியது. எந்த வழிபாட்டு தலமாக இருந்தாலும், இறைவன் உறையும் புனிதத்தலங்கள்தான் என்பதையும் எல்லா இடங்களிலும் வெவ்வேறு வடிவங்களில் உறைவது ஒரே தெய்வ சக்திதான் என்பதையும் தெளிவாகப் புரிந்துகொண்டார் மருத்துவர். பாபாவைப் பற்றிய சந்தேக நோயால் பீடிக்கப்பட்டிருந்த மருத்துவரின் மனம், அன்று முழு ஆரோக்கியம் அடைந்தது. அன்று தொட்டு அவர் பாபா பக்தரானார். பாபாவைத் தேடிவருபவர்களில், வியாதி குணமாக வேண்டும் என்னும் கோரிக்கையோடு வருபவர்களின் எண்ணிக்கையே அதிகம். பலதரப்பட்ட மருந்துகளை சாப்பிட்டும், குணமாகாத வியாதிகள் பாபாவின் தரிசனத்தால் குணமாவதை பக்தர்கள் அறிந்திருந்தார்கள். ஏழை நோயாளிகளுக்கு பாபாவே கண்கண்ட தெய்வம். மருத்துவர்கள் மேல் இருந்த நம்பிக்கையை விட, பாபா மேல் இருந்தநம்பிக்கை அவர்களுக்கு அதிகம். பூட்டி என்பவருக்கு ஒருமுறை ஒரே நேரத்தில் இரண்டு சிக்கல்கள் நேர்ந்தன. ஒன்று கடுமையான வயிற்றுப் போக்கு. இன்னொன்று ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை வாந்தி. மிகச் சில நாள்களிலேயே மிகுந்த பலவீனம் அடைந்தார். எல்லா மருத்துவர்களும் கைவிரித்து விட்டார்கள். அவருக்கு பாபா மேல் அளவற்ற பக்தி உண்டு. ஆனால், நேரில் சென்று பாபாவைத் தரிசிக்கும் அளவு அவர் உடலில்  தெம்பில்லை. கிழிந்த நாராகப் பாயில் படுத்திருந்தார். பாபா எவ்விதமேனும் அவரை அழைத்து வருமாறு, ஓர் அடியவரை அனுப்பினார். அவரைக் கைத்தாங்கலாகப் பற்றிக்கொண்டு பூட்டி, மசூதிக்கு வந்துசேர்ந்தார்.

பாபா! என்னைக்  காப்பாற் றுங்கள்! என்று கதறினார். பூட்டியையே உற்றுப் பார்த்த பாபா, உன் வயிற்றுப் போக்கு, வாந்தி இரண்டுமே உடனடியாக நிற்க வேண்டும், இது என் ஆணை, தெரிந்ததா? என்று கண்டிப்பான குரலில் கட்டளையிட்டார். பாபாவின் வார்த்தைகளுக்கு மந்திர சக்தி உண்டல்லவா? வயிற்றுப் போக்கையும் வாந்தியையும் உண்டாக்கிய நோய்க்கிருமிகள் அவரது அதட்டலால் பயந்திருக்க வேண்டும். அடுத்த கணமே அவரது நோய் அவரை விட்டு நீங்கிவிட்டது. பாபாவின்திருவடிகளைப் பணிந்த அவர், கம்பீரமாக நடந்து இல்லம் திரும்பினார். தன்னை ஒரே அதட்டலில் குணப்படுத்திய பாபாவின்கருணையை நினைத்து அவரது நெஞ்சம் நெகிழ்ந்தது. பாபாவுக்கு கண்பத் என்றொரு பக்தர் உண்டு. அவர் கொடிய வகைப்பட்ட மலேரியாவால் கஷ்டப்பட்டார். பாபாவைச் சரணடைந்தார். அவரை உற்றுப் பார்த்த பாபா, முன்வினையால் தான் அந்த நோய் அவரைத் தாக்கியிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார். அந்த நோய்க்கு பாபா சொன்ன வைத்தியம் யாரும் எதிர்பாராதது. கொஞ்சம் சோறை எடுத்துத் தயிரோடு கலந்துகொள்! என்று பாபா ஆரம்பித்தபோது, கண்பத், தயிர் கலந்த சோறை எத்தனை வேளை சாப்பிடவேண்டும் என அக்கறையோடு விசாரித்தார். பாபா நகைத்தவாறே நீ அதைச் சாப்பிட வேண்டும் என்று நான் சொல்லவில்லையே? என்றார்.  பின் அந்தத் தயிர் கலந்த சோறை என்ன செய்யவேண்டும் என அறிவுறுத்தினார். அப்படிச் செய்வதற்கும், தன் நோய்க்கும் என்ன சம்பந்தம்? இப்படி செய்வதனால் தன் நோய் எப்படி குணமாகும்? எனப் பெரும் திகைப்பில் ஆழ்ந்தார் கண்பத்.....!

 
மேலும் ஷிர்டி சாய் பாபா »
temple news
உண்மையிலேயே அந்தச் செய்தி ஷிர்டி கிராமத்தில் வாழ்ந்த மக்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. ... மேலும்
 
temple news
ஷிர்டி ஒரு சிறிய கிராமம். கடவுள் நம்பிக்கை கொண்ட எளிய மக்கள் அங்கே வாழ்ந்து வந்தார்கள். இறை சக்தி, ... மேலும்
 
temple news
ஷிர்டி கிராமத்துக் கோயில் பூஜாரி  சொன்னபடி கடப்பாரையால் வேப்பமரத்தின் அடிப்பகுதியைத் தோண்டத் ... மேலும்
 
temple news
ஷிர்டியிலுள்ள வேப்ப மரத்தடியில் தியானம் செய்துகொண்டிருந்தானே வசீகரம் நிறைந்த இளைஞன் ஒருவன்! அவனை ... மேலும்
 
temple news
கானகத்தில் தன் குதிரையைக் கண்டுபிடித்துக் கொடுத்த அந்த அதிசயப் பக்கிரியை பக்தியோடு வணங்கி எழுந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar