குளித்தலை: குளித்தலை மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர். இக்கோயிலில் திருவிழா கடந்த 4ம் தேதி இரவு பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.