பதிவு செய்த நாள்
24
மே
2014
12:05
வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே, வேலப்பநாய்க்கன்வலசு, பகவதியம்மன் கோவிலில், பத்தாண்டுக்குப்பின், நேற்று முன்தினம், கிடாய் வெட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. வேலப்பநாயக்கன்வலசு, பகவதியம்மன் கோவிலில், குழந்தை, மாணவ, மாணவியர், ஆடு, மாடு, நாய் ஆகிய தோற்றத்தோடு, உருவ பொம்மைகளை செய்து, அதற்கு சிறப்பு பூஜை செய்து, நேர்த்திக்கடனாக செலுத்துவர். அதுபோன்று, 24 உருவ பொம்மைகள், கோவிலை வலம் வந்து வைத்தனர். மாலை, ஆறு மணியளவில், குதிரை கண் திறத்தல் நிகழ்ச்சி நடந்தது. பகவதியம்மன் மற்றும் மாரியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு, இரவு, ஏழு மணியளவில் ஆண்கள், பெண்கள், மாணவ, மாணவியர் என, சேற்று வேஷமிட்டு ஆட்டம் போட்டு, தங்களது கோரிக்கை நிறைவேறியதற்காக, நேர்த்திக்கடன் செலுத்தினர். பின், எருமைக்கிடாய் வெட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கும்பம், கங்கை அடைதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று, காலை, மஞ்சள் நீராட்டு விழாவும், மறு அபிஷேக நிகழ்ச்சியும் நடந்தது.