பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் சீதா- ராமர் திருக்கல்யாண உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மே 2014 10:05
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில், சீதா- ராமருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் எழுந்தருளியுள்ள பட்டாபிஷேக ராமபிரானுக்கு, வசந்த உற்சவ விழா கடந்த 23ம் தேதியிலிருந்து நடந்து வருகிறது. துவக்க விழாவில், மூலவரான ராமருக்கு, சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தது.நேற்று காலை 8:00 மணியளவில் ராமருக்கு திருமஞ்சனம் நடந்தது. 10:00 மணியளவில், சீதா-ராம திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் ராமர், சீதை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.மாலை 5:00 மணிக்கு, வசந்த மண்டபத்தில் சீதா-ராமருக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து காய் கனி அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.