வடமதுரை : வடமதுரை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்தாண்டு நடந்தது. அதன் தொடர்ச்சியாக வருடாபிஷேக விழா நடந்தது. மங்கம்மாள் கேணி விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம், தீர்த்தம் குடம் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கி, பல்வேறு பூஜைகளும், திருமஞ்சனம், அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு அம்மன் மின் அலங்கார ரதத்தில் வடமதுரையின் நான்கு ரத வீதிகள் வழியே நகர்வலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாட்டினை கோயில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.