Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உபநிஷதம் ஒரு கண்ணோட்டம்! நாம் யார்?
முதல் பக்கம் » ஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்)
ஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2014
03:05

சற்றே சிந்திக்கத் தெரிந்த யாருக்கும் புலனாகின்ற உண்மை ஒன்று உண்டு; நாம் அறியாமையில் இருக்கிறோம் என்பதுதான் அது. விஞ்ஞானம், கலை என்று பல விஷயங்களை நாம் அறிந்திருக்கலாம். ஆனால் இவை சில தகவல்களே தவிர உண்மையறிவு ஆகாது. நம்மைப்பற்றிய அறிவே <உண்மையறிவு.

நாம் யார், எங்கிருந்து வந்தோம், எங்கே போய்க் கொண்டிருக்கிறோம், எங்கே போக வேண்டும் என்ற எதுவும் தெரியாத நிலையில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அவ்வளவு ஏன், அடுத்த கணம் என்ன நடக்கப் போகிறது என்பதுகூட நமக்குத் தெரியாது. அதனால்தான் <உபநிஷத ரிஷி, இறைவா! அறியாமை இருளிலிருந்து என்னை அறிவின் ஒளிக்கு அழைத்துச் செல்வாய் (1. தமஸோ மா ஜ்யோதிர் கமய-அப்யாரோஹ மந்திரம், பிருஹதாரண்யக உபநிஷதம், 1.3.28.)என்று பிரார்த்தனை செய்கிறார்.

அத்தகைய பிரார்த்தனைகளின் பலனாக, ஜபம் தவம் போன்ற ஆன்மீக சாதனைகளின் பலனாக இறைவனின் அருட்கிரணம் நம்மில் பட்டு நமது உணர்வின் ஒளியைத் தூண்டுகிறது. நமக்கு ஒளியின் காட்சி, ஒளிமயமான இறைவனின் காட்சி கிடைக்கிறது; அறியாமை இருள் விலகுகிறது; எல்லாம் நமக்குப் புரிகிறது.

ஆனால் ஒளியின் காட்சியுடன் நமது பயணம் நின்று விடவில்லை. அறுதி <உண்மை என்பது அனைத்தையும் கடந்தது; இருள்- ஒளி, துன்பம்-இன்பம், தீமை- நன்மை போன்ற அனைத்து இருமைகளுக்கும் அப்பாற்பட்டது. அந்த இடத்தை அடையும்போதுதான் நமது பயணம் லட்சியத்தை அடைகிறது. எனவே, ஒளிமயமான காட்சியைப் பெற்ற முனிவர் தன்னை ஒளிக்கும் அப்பால் அழைத்துச் செல்வதற்குப் பிரார்த்திக்கிறார்.

ஒளிக்கு அப்பால் இருப்பது என்ன?

ஒளிக்கு அப்பால் தம்மையே காண்பதற்காக உபநிஷத முனிவர் கூறுகிறார். அறுதிநிலை அனுபூதி இது. இதனைப் படிப்படியாக இந்த உபநிஷதத்தில் நாம் காண்கிறோம்.

1. நூறாண்டுகள் வாழ்க!

அறுதி உண்மையான பரம்பொருளை அடைய வேண்டுமானால் முதலில் ஒளியை அடைந்தாக வேண்டும். அதற்கு வாழ்க்கையையே வழியாக இந்த <உபநிஷதம் சொல்கிறது. வாழ்க்கையிலிருந்து விலகி ஓடுவதல்ல; வாழ வேண்டிய முறையில் வாழ்க்கையை வாழ்வது எப்படி என்பதை அறிந்து, அதன்படி வாழ்ந்தால் அதுவே ஓர் ஆன்மீக சாதனையாகி விடுகிறது; ஒளியை அடைவதற்கான, இறையனுபூதிக்கான ஒரு வழியாகிவிடுகிறது. உரிய முறையில் வாழ்வது என்பதை இரண்டு படிகளாக முதல் இரண்டு மந்திரங்கள் கூறுகின்றன.

தியாகத்துடன் அனுபவி:

ஓம் ஈசாவாஸ்யமிதக்ம் ஸர்வம் யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத்
தேன த்யக்தேன புஞ்ஜீதா மா க்ருத: கஸ்யஸ்வித் தனம் (1)

ஜகத்- மாறுகின்ற இயல்புடைய; ஜகத்யாம்- <உலகின்; யத் கிம் ச- எவை உள்ளனவோ; இதம் ஸர்வம்- அவை அனைத்தும்; ஈசா- இறைவனால்; வாஸ்யம்- நிறைக்கப்பட வேண்டும்; தேன- அந்த; த்யக்தேன- தியாகத்தினால்; புஞ்ஜீதா- அனுபவி; தனம்- பணம்; கஸ்ய ஸ்வித்- யாருடையது; மா க்ருத- ஆசைப்படாதே.

1. மாறுகின்ற இயல்புடைய இந்த உலகில் உள்ள
அனைத்தும் இறைவனால் நிறைக்கப்பட வேண்டும்.
அத்தகைய தியாக சிந்தனையுடன் உலகை அனுபவி.
பணம் யாருடையது? அதற்காக ஆசைப்படாதே.

உலகமும், அதன் செல்வங்களும், அது தரும் சுகபோகங்களும் எல்லாம் மாறுபவை. அதாவது நிலையற்றவை. நிலையான இன்பம், அமைதி எதையும் இந்த உலகிலிருந்து நாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால் நிலைத்த இன்பத்தையும் அமைதியையும்தான் நாம் ஒவ்வொரு வரும் தேடுகிறோம். அதனைப் பெற என்ன வழி?

அனைத்தையும் இறைவனால் நிறைக்க வேண்டும். இதன் பொருள் என்ன? விளக்குகிறார் சுவாமி விவேகாந்தர்:

அனைத்தையும் இறைவனால் நிறைக்க வேண்டும்; ஒருவகை போலியான இன்ப நோக்காகவோ, இல்லை, துன்பங்களைக் கண்டும் காணாததுபோல் இருக்கும் பாசாங்காகவோ அல்ல. <உண்மையிலேயே எல்லாவற்றிலும் இறைவனைக் காண்பதன் மூலம் இதைச் செய்ய வேண்டும்.... இதன் பொருள் என்ன? நீ உன் மனைவியோடு வாழலாம்; அவளைக் கைவிட வேண்டும் என்பதல்ல. ஆனால் அவளிடம் கடவுளைக் காண வேண்டும்... உங்கள் குழந்தை

களில் இறைவனைக் காணுங்கள். எல்லாவற்றிலும் இப்படியே. வாழ்விலும் சாவிலும் இன்பத்திலும் துன்பத்திலும் எல்லாவற்றிலுமே இறைவன் சமமாக நிறைந்திருக்கிறார். கண்களைத் திறவுங்கள், அவரைப் பாருங்கள்.

நாம் நமது கற்பணையால், நமது அனுமானத்தால் உருவாகிக் கொண்டிருக்கும் உலகத்தைத் துறந்துவிட வேண்டும். ஏனென்றால் இந்த அனுமானம் முழுமையற்ற அனுபவத்தை ஆழமற்ற அறிவை நமது சொந்த பலவீனத்தை அடிப்படையாகக் கொண்டது. இதைத் துறந்துவிடுங்கள். நாம் இதுவரை நினைத்துவந்த, எல்லோரும் உடும்புப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கின்ற உலகம் நம்முடைய கற்பனையில் தோன்றிய பொய்யான உலகம். அதை விட்டுவிடுங்கள். நன்றாகக் கண்களைத் திறந்து பாருங்கள். இப்படிப்பட்ட ஓர் உலகம் எப்போதுமே இருக்கவில்லை என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். அது ஒரு கனவு, மாயை. இருந்தது கடவுள் மட்டுமே. குழந்தையில், மனைவியில், கணவரில் எல்லாவற்றிலும் இருப்பவர் அவரே. நல்லவரில் இருப்பதும் அவரே, தீயவரில் இருப்பதும் அவரே, பாவத்தில் இருப்பதும் அவரே, பாவியாக இருப்பதும் அவரே. வாழ்விலும் அவரே இருக்கிறார். சாவிலும் அவரே இருக்கிறார். (1. இதம் என்பதே வார்த்தை. பாõரயண முறைக்காக "க் சேர்க்கப்பட்டு, இதக்ம் என்று ஓதப்படுகிறது.)

எங்கும் இருப்பவர் அவர். எல்லாம் அவருடையது; வேறு யாருடையதும் அல்ல. எனவே நமக்கென்று வாய்த்த செல்வத்திலும் ஆசை கொள்ளாமல் அனைத்தும் இறைவனுக்கு உரியவை என்ற தியாக சிந்தையுடன் உலகை அனுபவிக்குமாறு கூறுகிறது உபநிஷதம். இது முதற்படி.

தியாகத்தால் பற்றின்மை:

எல்லாம் இறைவனுடையது என்ற தியாக சிந்தையுடன் வாழ்வதால் பற்றின்மை உண்டாகிறது.

குர்வன்னேவேஹ கர்மாணி ஜிஜீவிஷேச்சதக்ம் ஸமா:
ஏவம் த்வயி நான்யதேதோஸஸ்தி ந கர்ம லிப்யதே நரே (2)

இஹ- உலகில்; கர்மாணி- கடமைகளை; குர்வன் ஏவ- செய்தபடி மட்டுமே; சதம்- நூறு; ஸமா:- ஆண்டுகள்; ஜிஜீவிஷேத்- வாழ விரும்பு; த்வயி நரே- உன்னைப் போன்ற மனிதனுக்கு; ஏவம் இத:- இதைத் தவிர; அன்யதா- வேறு வழி; ந அஸ்தி- இல்லை; கர்ம- கடமைகள்; ந லிப்யதே- பற்றுவதில்லை.

2. கடமைகளைச் செய்தபடியே நூறு ஆண்டுகள்
வாழ விரும்பு. (உலகை அனுபவித்து வாழ விரும்பு
கின்ற) உன்னைப் போன்றவர்களுக்கு இதைத்தவிர
வேறு வழி இல்லை. (இவ்வாறு வாழ்வதால்)
கடமைகள் உன்னைப் பற்றுவதில்லை.

உலகில் வாழ வேண்டும். அதற்கு வேலை செய்தாக வேண்டும். கடமைகளைச் செய்யாமல் யாரும் வாழ முடியாது. எந்த வேலையைச் செய்தா<லும் அதற்கு விளைவு ஒன்று இருக்கும். அது நல்லதாக இருக்கலாம், கெட்டதாக இருக்கலாம், இரண்டும் கலந்ததாக இருக்கலாம்; ஆனால் விளைவு ஒன்று இருந்தே தீரும். விளைவு எதுவானாலும் அது நம்மைப் பிணைக்கிறது; மனத்தில் ஒரு பதிவை உண்டாக்குகிறது. அந்தப் பதிவு, நாம் மேலும் அந்தச் செயலைச் செய்யுமாறு தூண்டுகிறது. மீண்டும் நாம் அந்த வேலையைச் செய்கிறோம். இவ்வாறு வேலைகள் தொடர்கின்றன. இது, தொடர்ந்த பிறவிக்கு வழியாகிறது.

ஆனால் உலகை இறைவனுக்கு <உரியதாகக் கண்டு, அவரது சொத்திற்கும் சுகத்திற்கும் ஒரு பொறுப்பாளனைப் போல் வாழ்ந்தால், அந்த ரீதியில் வேலை செய்தால் அந்த வேலையின் பலன் நம்மைப் பிணைக்காது. பலன் நம்மைப் பிணைக்காதலால் அத்தகைய வேலை அக வளர்ச்சிக்கான ஓர் ஆன்மீக சாதனையாக ஆகிவிடுகிறது.

 
மேலும் ஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்) »
temple news
வேதங்கள்!உலகின் பெரும் பகுதி அறியாமை இருளில் மூழ்கி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, பாரதத் திருநாடு ... மேலும்
 
உலகை இறைவனுக்கு உரியதாகக் கண்டு, அதற்கேற்ப கடமைகளைச் செய்யும்போது அது ஆன்மீக சாதனை ஆகிறது. உலகில் ... மேலும்
 
ஆன்ம அனுபூதி பெற்றவனின் அனுபவத்தை இந்த மந்திரம் கூறுகிறது.ஸ பர்யகாச்சுக்ரமகாயமவ்ரணம்அஸ்னாவிரக்ம் ... மேலும்
 
எங்கும் இறைவன் இருப்பதாகக் கண்டு கடமைகளைச் செய்பவன் பற்றின்றி வேலை செய்கிறான் ( 1-2); அதனால் ஒளிமயமான ... மேலும்
 
ஒளிமயமான இறைவனை அடைவது பற்றி 8-ஆம் மந்திரம் கூறியது. அந்த ஒளிக்கு அப்பால் என்ன உள்ளது என்பதுபற்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar