ஸ்ரீவி., வைத்தியநாதசுவாமி கோயில் தேரோட்ட விழா : ஜூன் 2ல்துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2014 02:05
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில், வைகாசி தேரோட்ட விழா, ஜூன் 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி அன்று காலை 6 மணிக்கு, சிறப்பு பூஜைகளுக்கு பின் கொடியேற்றப்படுகிறது. இரவு வெட்டி வேர் சப்பர காட்சி நடக்கிறது. விழா நாட்களில் காமதேனு, பூதம், ஹம்ச வாகனம், ரிஷப வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடக்கிறது. 7ம் நாள் மாலை 6.30 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக ஜூன்10ம் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் சப்தாவர்ணமும், தீர்த்தவாரி நடக்கிறது. இரவு சமய சொற்பொழிவு நடக்கிறது. ஏற்பாடுகளை, கோயில் தக்கார் ராமராஜா, செயல் அலுவலர் அஜித் செய்தனர்.