Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கடற்கரையில் சுவாமி ... விருதை கோவிலில் ஊஞ்சல் உற்சவம்! விருதை கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஷீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2014
11:06

திருத்தணி : ஷீரடி சாய்பாபா கோவிலில், நேற்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. திருத்தணி ஒன்றியம், தலையாரி தாங்கல் கிராமத்தில், புதியதாக ஷீரடி சாய்பாபா கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலின் கும்பாபிஷேகம், கடந்த மாதம் 30ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. விழாவை ஒட்டி, கோவில் வளாகத்தில், நான்கு யாகசாலை, 1,500 கலசங்கள் வைத்த கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் மூன்று கால யாகபூஜைகள் நடந்தன. நேற்று காலை, 7:00 மணிக்கு, நான்காம் காலயாக பூஜையும், காலை, 8:30 மணிக்கு யாத்ரா தானம், காலை, 9:40 மணிக்கு கலசப் புறப்பாடு நடந்தது.காலை, 10:00 மணிக்கு கோவில் மேல் புதியதாக அமைக்கப்பட்ட விமானத்தின் மீது கலச நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர், மூலவர் சாய்பாபா, விநாயகர், பாலமுருகன் ஆகிய சன்னிதிகளும் கலச நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. நண்பகல், 11:00 மணிக்கு மூலவர் சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மதிய ஆரத்தி நடந்தது. அப்போது, கேரள சண்டி மேளம், மங்கள வாத்தியம் வாசிக்கப்பட்டது.விழாவில், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் பாண்டியன், திருத்தணி நகராட்சி தலைவர் சவுந்தர்ராஜன் உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, சாய்பாபாவை வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar