சென்னை: சென்னை, அம்பத்தூர், வரதராஜபுரம், ஸ்ரீ ஷீரடி சாய் பாபா ஆலயத்தில், 7 குதிரைகள் பூட்டிய சூரிய பிரபை ரதத்தில் உற்சவர் ஷீரடி பாபா, பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து தீபாராதனை, ஆரத்தி, பஜனைப் பாடல்கள், அன்னதானம் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.