வெள்ளித் தேரில் கொளஞ்சியப்பர் சுவாமி அருள்பாலிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூன் 2014 12:06
விருத்தாசலம்: கொளஞ்சியப்பர் சுவாமி வெள்ளித் தேரில் உட்பிரகார வலம் வந்து அருள்பாலித்தார். விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில் கிருத்திகையொட்டி கடந்த 28ம் தேதி காலை சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக் கவசத்தில் தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணியளவில் வெள்ளித் தேரில் கொளஞ்சியப்பர் உற்சவர் சுவாமி உட்பிரகார வலம் வந்து அருள்பாலித்தார். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.