பதிவு செய்த நாள்
02
ஜூன்
2014
01:06
காளையார்கோவில் : காளையார்கோவில், சிவல்புஞ்சை முத்துமாரியம்மன் கோயிலில், கும்பாபிஷேகம் நடந்தது. இங்கு, மே 28ல் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. ஆறுகால யாகபூஜை, கோபூஜை, சிறப்பு அபிஷேகம், தீபாரதனைகளும் நடந்தது. நேற்று காலை 9மணிக்கு கடம் புறப்பாடும், 10 மணிக்கு கோபுர கலசத்தில், புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தினர். அதை தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. அன்னதானம் நடந்தது.