ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில் வைகாசி திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி நேற்று காலை 6.30 மணிக்கு, கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவு, வெட்டி வேர் சப்பரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. விழா நாட்களில் பல் வேறு வாகனங்களில் சுவாமி, சிவகாமி அம்பாள் வீதியுலா நடக்கிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான ஜூன்10ம் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் வைகாசி விசாகத்தையொட்டி சப்தாவர்ணம், தீர்த்தவாரி நடக்கிறது. விழா நாட்களில் இரவு சமய சொற்பொழி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் ராமராஜா, செயல் அலுவலர் அஜித் செய்தனர்.