பதிவு செய்த நாள்
03
ஜூன்
2014
02:06
பரமக்குடி : நயினார்கோவில், நாகநாதசுவாமி கோயிலின் வைகாசி வசந்தோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரவு சுவாமி - அம்பாள் இந்திர விமானத்தில் வீதியுலா வந்தனர். காலை, மாலை வெள்ளி நந்திகேஸ்வரர், கம்ஸ், பூத, சிம்ம, யானை, ரிஷப, கைலாச, குதிரை வாகனங்களில் வீதியுலா நடைபெறும். ஜூன் 7ல், திருஞானசம்பந்தருக்கு திருமுலைப்பால் ஊட்டல், 9 ல் நடராஜர் புறப்பாடு, சுந்தரமூர்த்தி சுவாமி திருஊடல் தீர்த்தல் வைபவம் நடைபெறுகிறது. ஜூன் 10 காலை 8.30 முதல் 9.30 மணிக்குள் தேரோட்டம், மறுநாள் தீர்த்தோச்சவம், ஜூன் 16 ல் உற்சவ சாந்தியுடன் விழா நிறைவடைகிறது. விழா நாட்களில் சிறப்பு மேள கச்சேரிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை பொறுப்பாளர் தெய்வச்சிலை ராமசாமி, ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் மகேந்திரன் செய்து வருகின்றனர்.