இந்தக் காலத்திலும் சித்தர்கள் மலையில் வாழ்கிறார்களா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூன் 2014 02:06
நிறைய வாழ்கிறார்கள். மலைகளில் மட்டுமில்லாமல் நிலத்திலும் வாழ்கின்றனர். நாம் அடையாளம் கண்டு கொள்ளாத வகையில் வாழ்கிறார்கள். காரணம், இந்தக் கால மனிதர்களின் வாழ்க்கைத் தரம் குறைந்து விட்டதே காரணம். சித்தர் எனத் தெரிந்து கொண்டு, சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள தொடங்கி விடுவார்கள். சொல்லப் போனால், அவரை வைத்து வியாபாரம் ஆரம்பித்து விடுவார்கள். பழநியில் சாக்கடை சித்தர் என்று ஒருவர் இருக்கிறார். அவர் யாருடைய ஆதரவையும் ஏற்காமல் அங்கேயே வசித்து வருகிறார். நேபாளத்தில் இமயமலை சிகரத்தில் அந்தரத்தில் மிதக்கும் சித்தர் ஒருவர் இருப்பதாகச் சொல்கிறார்கள். அவரைக் கண்டுபிடிக்கவே பலநாட்கள் ஆனதாம்.