கோலோச்சும் முருகன் கோவிலில்.. குருப்பெயர்ச்சி விழா யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூன் 2014 12:06
துறையூர்: துறையூர் கோலோச்சும் முருகன் கோவிலில், வரும், 13ம் தேதி குருப்பெயர்ச்சி விழா நடத்தப்படுகிறது. கோவிலில் எழுந்தருளியுள்ள குருபகவானுக்கு, ஜானகிராம் சுவாமிகள் தலைமையில் யாகம் செய்யப்படும். மூங்கில் தெப்பக்குளத்திலிருந்து, 13ம் தேதி காலை, ஒன்பது மணிக்கு பால்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வந்து, அபிஷேகம் நடைபெறும். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். துறையூர் நந்திகேஸ்வரர் கோவிலிலும், காசிவிஸ்வநாதர் கோவிலிலும், காமாட்சியம்மன் ஏகாம்பரமேஸ்வரர் கோவிலிலும் குருப்பெயர்ச்சி விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.