பேரூர் : பேரூரிலுள்ள கபாலி மாரியம்மன் கோவிலில் வைகாசி பெருவிழா நடக்கிறது. விழா, கடந்த 27ம் தேதி அக்னிகம்பம் நடுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, 28ம் தேதி முதல் நேற்று வரை ஆறுநாட்களுக்கு, பூவோடு திருவீதி உலா நடந்தது. நேற்று காலை திருக்கல்யாண உற்சவம், சக்தி விந்தை ஆகியன நடத்தப்பட்டது. நாளை மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. 6ல் அம்மன் திருவீதி உலாவும், 7ல் சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. வரும் 8ல் மறுபூஜையுடன் விழா முடிகிறது.