பதிவு செய்த நாள்
04
ஜூன்
2014
12:06
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே பெரும்புலியூர் கிராமத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.கடந்த, 31ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து, மூன்று கால யாக பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் காலை, ராஜகோபுரம் மற்றும் பெருமாள், தாயார், விமானம், ஆழ்வார், நாகர், ஆண்டாள், நரசிம்மன், கருடன், கரத்தாழ்வார், ஆஞ்சநேயர் ஆகிய சன்னதிகளின் கோபுரங்களுக்கு கும்பா பிஷேகம் நடந்தது. மாலையில், கருட சேவை வீதி புறப்பாடு நடந்தது. திருவையாறு, எம்.எல்.ஏ., ரெத்தினசாமி, பஞ்., தலைவர் சுரேஷ், அறநிலையத் துறைச் செயல் அலுவலர் கோவிந்தராஜு உட்பட பலர் பங்கேற்றனர்.