பதிவு செய்த நாள்
06
ஜூன்
2014
12:06
தியாகதுருகம்: தியாகதுருகம் மற்றும் புக்குளம் ஊர் எல்லையில் அமைந்துள்ள திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. தியாகதுருகம் புக்குளம் எல்லையில் உள்ள திரவுபதியம்மன் கோவில் ராஜகோபுரம், விமானம், அர்த்தமண்டபம், விநாயகர், மகாமாரியம்மன், முத்தால் ராவுத்தர் சன்னதி புதுப்பிக்கப்பட்டது. கோவில் அருகில் உள்ள பாறையில் 23 அடி உயர ஆஞ்சனேயர் சிலை அமைக்கப்பட்டது. இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 3ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று காலை 8 மணிக்கு கடம் புறப்பட்டு கோவிலை வலம் வந்தது. 8.15 மணிக்கு சி வாச்சாரியார் கார்த்திகேயன் சிவம் தலைமை யில் வேதமந்திரங்கள் முழங்க கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆரோதனை, விசேஷ அலங்காரம் செய்து மகாதீபாராதனை அர்ச்சகர் சரவணன் தலைமையில் நடந்தது. இரவு சர்வ அலங்காரத்தில் அம்மன் திருவீதியுலா நடந்தது. திருப் பணிக் குழு தலைவர் புகழ்வாணன், கோவில் பூசாரி கண்ணன், பிச்சாண்டிபிள்ளை, பேரூராட்சி மன்ற தலைவர் விஜயாராஜூ, தே.மு.தி.க., மாவட்ட அவைத்தலைவர் கோவிமுருகன், பேரூராட்சி கவுன்சிலர் ஜெகதீஸ்வரி, வள்ளிய ம்மாள் மெட்ரிக் பள்ளி செயலாளர் சுரேஷ், தனமூர்த்தி ஐ.டி.ஐ., தாளாளர் தட்சணாமூர்த்தி, சரோஜா பஸ் உரிமையாளர் முரளிபாபு, அ.தி. மு.க., நகர மாவட்ட பிரதிநிதி வேலு மணி, பா.ஜ., நகர தலைவர் சங்கர், பாலா பங்கேற்றனர்.