பதிவு செய்த நாள்
06
ஜூன்
2014
02:06
கும்பகோணம்: கும்பகோணம், ஆதிகும்பேசுவர ஸ்வாமி கோவிலில், நாளை (7ம்தேதி) தொடங்கி, 13ம்தேதி வரை நடைபெறுகிறது. காவேரியின் தென்கரையில் அமைந்துள்ள தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்கள் வரிசையில், 26வது திருத்தலமாக, ஆதிகும்பேஸ்வர ஸ்வாமி கோவில் திகழ்கிறது. இங்கு, திருக்கல்யாண திருவிழா நாளை (7ம் தேதி) தொடங்குகிறது. அன்று இரவு, 7மணிக்கு அம்பாள் தவக்கோலமும், 8 மணிக்கு சிவபெருமான் காட்சியளித்தலும், இரவு, 9 மணிக்கு நிச்சயதாம்பூலமும் நடைபெறுகிறது. வரும், 8ம்தேதி காலை, 10.30 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இரவு, 7மணிக்கு வெளிப்பிரகார உலாக நடைபெறுகிறது. ஜூன், 9ம்தேதி இரவு, திருமண மறைச்சடங்கு நலுங்கு ஊஞ்சல் மற்றும் இரவு பெரிய பிரகாரத்தில் உலா வந்து காட்சியளித்தல் நடைபெறுகிறது. வரும், 12ம் தேதி, ஸ்வாமி அம்பாளுடன் புறப்பாடு செய்து, பகல் மணி, 11 மணிக்கு சங்கரமடத்தில் எழுந்தருளி தீர்த்தவாரியும், இரவு, திருக்கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. வரும், 13ம்தேதி மகா சுத்தாபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் இணைந்து செய்துள்ளனர்.