பதிவு செய்த நாள்
07
ஜூன்
2014
11:06
பவானி: பவானியில், வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, முதற்கால யாக பூஜையுடன் துவங்கியது. கடந்த, ஒன்றாம் தேதி காலை, மூத்த பிள்ளையார் வேள்வி, பசு, யானை வழிபாடுடன் கும்பாபிஷே பூஜை துவங்கியது. தொடர்ந்து நேற்று, காலை, எட்டு மணிக்கு புனித நீர் எடுத்தல், வேள்வி தீ கைகொளல், வேள்விச்சாலை அழகுபடுத்துதல் நிகழ்ச்சி நடந்தது. மாலை, ஆறு மணிக்கு யாகசாலை பூஜைக்கு வந்திருந்தோர், ஆச்சாரியார்களும், மூக்கிய வீதி வழியாக, கோவிலை அடைந்தனர். பிரமாண்டமாக அமைக்கப்பட்ட யாகசாலையில், கணபதி பூஜையுடன், முதற்கால யாக பூஜை துவங்கியது. மங்கள இசை, ஐங்கரன் வழிபாடு, அறவழி புனித நீர் வழிபாடு, போன்றவை நடந்தது. இரவு, ஒன்பது மணிக்கு மேல், சுற்று மூர்த்திகளுக்கு, எண்வகை கட்டு மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. சங்கமேஸ்வரர் கோவிலில் நடக்கும் கும்பாபிஷேக விழாவில், சென்னை, பெங்களூரு உட்பட பல பகுதியை சேர்ந்த, 140 சிவச்சாரியார்கள் பங்கேற்றுள்ளனர். கும்பாபிஷேக விழா, வரும், ஒன்பதாம் தேதி காலை, ஆறு முதல், 7.30க்குள் நடக்கிறது.