சிங்கம்புணரி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ரூ.7 லட்சத்தில் சுகாதார வளாகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூன் 2014 12:06
சிங்கம்புணரி : சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக ஒன்றிய பொது நிதி ரூ 7.65 லட்சம் செலவில் சுகாதார வளாகம் அமைக்கப்படுகிறது. கோயிலை ஒட்டிய பகுதியான சிவபுரிப்பட்டி ஊராட்சி,மழுவேந்திநகரில் பக்தர்கள் குளிக்க தண்ணீர் தொட்டி,கழிப்பிட வசதியுடன் கூடிய சுகாதார வளாகம் அமைக்க ரூ.6.25லட்சம்,முடி எடுக்கும் இடத்தில் பக்தர்கள் குளிக்க ஆழ்குழாய் கிணறு அமைக்க ரூ1.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தேர்தல் நன்னடத்தை விதி நடைமுறையால் பணி துவங்க முடியவில்லை. தற்போது துவக்கியுள்ள பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.