பதிவு செய்த நாள்
07
ஜூன்
2014
02:06
தேவகோட்டை: 1848ல் தேவகோட்டை மேற்கு எல்கையில் கல்லாம்பிரம்பு காடு இருந்தது. காடாக இருந்ததால்,170 ஆண்டுகளுக்கு முன்பு, முருகப்பச் செட்டியார் என்பவர் அந்த வழியாக செல்வோர் இளைப்பாறி செல்ல கல் மண்டபம் கட்டினார். அந்த மண்டபத்தில் சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்க வாசகர் படங்களை வைத்து பூஜை செய்தார். இது தண்ணீர்பந்தல் காட்டுபகுதியில் இருந்ததால் அன்று காட்டு தண்ணீர் பந்தல் என்றழைத்தனர். தமிழடியார்கள் நால்வர் குருபூஜை செய்ததால் நால்வர் மடம் என்றும் கூறி வந்தனர். முருகப்பச் செட்டியாரின் பரம்பரையினர், தொடர்ந்து தண்ணீர்பந்தலை நடத்தி, குருபூஜை செய்து வந்தனர்.பொற்கிழி கவிஞர். அருசோமசுந்தரன்,பழமையான இந்த கல் மண்டபத்தை சீர் செய்து கான்கிரீட் மண்டபம் அமைத்தார். சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி மாதங்களில் நால்வருக்கும் பூஜை நடத்தினார். மேலும் புதிய இளைஞர்களை அழைத்து சிறு சிறு கூட்டங்கள் நடத்தி பேச்சாற்றலை வளர்த்தார்.மடமாக இருந்தால் பிற்காலத்தில் பராமரிப்பதில் சிரமம் ஏற்படலாம் என்று கருதிய அருசோ, நால்வர் மடத்தை நால்வர் கோயிலாக மாற்ற முடிவெடுத்தார். இதற்காக, காசி,கயா, நைமிசார்ண்யம், ஹரித்துவார், ரிஷிகேஷ் பகுதிகளில் இருந்து மண், தீர்த்தம் கொண்டு வந்து பூஜை செய்து, கோயில் திருப்பணி செய்வதில் ஆர்வமுள்ள சோமநாராயணன் செட்டியார் முன்னிலையில் பணிகளை தொடங்கினார். நால்வருக்கும் கற்சிலை அமைத்து கோயில் கட்டினார்.அருசோமசுந்தரன் கூறுகையில்,கோயில்களில் நால்வர் சன்னதி இருக்கலாம். ஆனால் நால்வருக்கென கோயில் தமிழகத்திலேயே இங்கு தான் உள்ளது. மூதாதையரின் பணியை தொடர்ந்து செய்வதிலும், சிறு கூட்டங்கள் நடத்தி பலரை பேச்சாளர்களாக உருவாக்கியதும் பெருமையாக இருக்கிறது. இளைஞர்கள் ஆன்மிகம்,பக்தி, சமூக சிந்தனை வளர இவ்வளாகத்திலேயே நுõலகம்,படிப்பகம் அமைத்துள்ளோம். காசி, திருச்செந்துõர், கன்னியாகுமரி பாதயாத்திரை செல்வோர் வழித்துணையாக கொண்டு செல்லும் வேல் இங்கு வைத்து தினமும் பூஜை செய்யப்படுகிறது,என்றார்.