காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் பிரம்மோற்சவ விழாவில் நேற்று தங்க காக்கை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது.திருநள்ளாரில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் தேர் திருவிழா நடந்தது. நேற்றிரவு சனீஸ்வர பகவான் தங்க காக்கை வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முன்னதாக சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. விழாவில் கட்டளை தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜன்வீராசாமி, ராஜாசுவாமிநாத சிவாச்சாரியார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.