மேலூர்: மேலூர் அருகே திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் ஜூன் 2ல் கொடியேற்றத்துடன் வைகாசி மாத திருவிழா துவங்கியது. அதனைத் தொடர்ந்து ஜூன் 6ல் திருமறைநாதர், வேதநாயகி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் பல்லக்கில் மேலூருக்கு எழுந்தருளினார். இந்நிகழ்ச்சி மா ங்கொட்டை திருவிழாவாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து திருமறைநாதர், வேதநாயகி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் மேலூர், திருவாதவூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு, புது தாலி அணிந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் திருக்கல்யாண விருந்து வழங்கப்பட்டது.