பதிவு செய்த நாள்
11
ஜூன்
2014
02:06
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், தேர்த்திருவிழாவை முன்னிட்டு, கம்பன் விழாக்குழு சார்பில், கவிரயங்கம் நடந்தது. திருச்செங்கோடு வைகாசி விசாக தேர்த் திருவிழாவை முன்னிட்டு, கம்பன் விழாக் குழுவின் சார்பில், 35ம் ஆண்டு விழாவாக, கைலாசநாதர் ஆலய சொக்கப்ப முதலியார் அரங்கில், கவியரங்கம் நடந்தது. செங்குந்தர் கல்வி நிறுவன தலைவர் ஜான்சன்ஸ் நடராஜன் தலைமை வகித்தார். கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவன சேர்மன் ரங்கசாமி, வித்யாவிகாஸ் கல்வி நிறுவன தாளாளர் சிங்காரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் அப்துல்காதர் தலைமையில், கவியரங்கம் நடந்தது. அதில், "தயரதன் நரைமுடி என்கிற தலைப்பில் சென்னை ஆண்டாள் பிரியதர்ஷினி, "காகுந்தன் அடிபொடி என்கிற தலைப்பில் கீரைப்பட்டி பிரபாகரன், "அரியனை மேல்மிதியடி என்கிற தலைப்பில் தஞ்சை இனியன், "ராவணன் வீணைக் கொடி எனகிற தலைப்பில் நெல்லை ஜெயந்தா, "குண்ட நெருப்பு மடி என்கிற தலைப்பில் அரூர் மதிவாணன் ஆகியோர் கவிதை பாடினர். தமிழ் ஆர்வலர், பக்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.