மயிலம்: மயிலம் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. கொல்லியங்குணம் சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. சிவபெருமானுக்கு மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.பின்னர் சுவாமிக்கு மகா தீபாராதனை, வழிபாடு நடந்தது. ஆலகிராமம் எமதண்டீஸ்வர் கோவிலில் சுவாமிக்கு நேற்று மாலை சிறப்பு வழிபாடு மகா அபிஷேகம் நடந்தது. இரவு 7 மணிக்கு திரிபுரசுந்தரிக்கு அபிஷேகம் நடந்தது. பாதிராப்புலியூரில் சிவன் கோவிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் வழிபாடுகள் நடந்தது. இரவு 7 மணிக்கு நடந்த தீபாராதனையில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மயிலம் சுந்தர விநாயகர் கோவிலில் சுவாமிக்கு அலங்காரம் செய்திருந்தனர். மாலை 6 மணிக்கு நடந்த சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.