திருநள்ளார் தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் தெப்போற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2014 11:06
காரைக்கால்: திருநள்ளார் தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் பிரமோற்ச விழாவில் தெப்போற்சவம் நடந்தது. காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலின் பிரமோற்சவ விழா கடந்த 25ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. விநாயகர், சுப்ரமணியர், அடியார் நால்வர் புஷ்ப பல்லக்கு உற்சவம் நடந்தது.பிரமோற்சவ விழாவில் தங்க ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது.பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் தங்க ரிஷப வாகனம்.மற்றும் தேரோட்டம், சனீஸ்வரபகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.நேற்று முன்தினம் இரவு தெப்போற்சவம் நடந்தது.இந்நிகழ்ச்சியில் கட்டளை தம்பிரான் சுவாமி,கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜன் வீராசாமி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனார்.