திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கீழையூர் பாலசுப்ரமணியர் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. முருகப்பெருமானின் ஜனன தினமான நேற்று காலை 7 மணிக்கு மூலவர் வள்ளிதேவசேனா சமேத பாலசுப்ரமணியர்க்கு சிறப்பு அபிஷேகம் நடந் தது. 8 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை, அர்ச்சனை நடந்தது. மாலை 6 மணிக்கு வெள்ளிக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலி த்தார். ராஜா குருக்கள் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.