ராமநாதபுரம் : ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில், காகம் டிரஸ்ட் சார்பில் குரு பெயர்ச்சி இலவச மகா சாந்தி, யாக பூஜை நாளை(ஜூன் 13) மதியம் 2.30 மணிக்கு 12 ஆயிரம் அர்ச்சனைகளுடன் துவங்குகிறது. மாலை 4.30 மணி முதல் சங்கல்ப பூஜை நடக்கிறது. சீனிவாச சாஸ்திரி, சம்பத் சாஸ்திரி உள்பட 10க்கும் மேற்பட்ட விற்பன்னர்கள் யாக சாந்தி செய்கின்றனர். மாலை 6 மணிக்கு குரு பகவானுக்கு 11 வகை அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. இரவு 8.30 மணிக்கு, பள்ளியறை பூஜையுடன் பெயர்ச்சி விழா நிறைவடைகிறது. விழாவுக்கு டிரஸ்ட் நிறுவனர் ராஜலட்சுமி அருளுரை வழங்குகிறார். ன்னதானம் வழங்கப்படுகிறது.