பதிவு செய்த நாள்
16
ஜூன்
2014
09:06
சூரியன், புதன் மாதம் முழுவதும் நற்பலன் வழங்குவார்கள். சுக்கிரன் ஜூன் 18 வரையும், ஜூலை14 க்கு பிறகும் நன்மை தருவார். ராசிக்கு மூன்றாம் இடமான துலாமில் இருந்து நன்மை வழங்கிய ராகு, ஜூன் 21ல் 2-ம் இடமான கன்னிக்கு வந்துள்ளார். இது சிறப்பான இடம் அல்ல. இதனால் குடும்பத்தில் பிரச்னையும், வெளியூர் பிரயாணத்தையும் ஏற்படுத்துவார். கேது 9 ல் இருந்து பொருள் இழப்பு, முயற்சியில் தோல்வியைத் தந்திருப்பார். அவர் ஜூன் 21ல் 8-ம் இடத்திற்கு மாறுவதன் மூலம் கெடுபலன் இனி நடக்காது. அதேநேரம் அவர் மேஷத்திற்கு மாறுவதும் சிறப்பானது அல்ல. அவரால் உடல் உபாதை வரலாம். சூரியனால் சமூகத்தில் மதிப்பு கூடும். அரசு வகையில் நன்மை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஜூலை 4-ந் தேதிக்கு பிறகு தொழிலில் லாபம் அதிகரிக்கும். தொழில் ரீதியான வெளியூர் பயணம் நன்மையளிக்கும். பணியாளர்களுக்கு வேலையில் மகிழ்ச்சியும் ஈடுபாடும் அதிகரிக்கும். சலுகைகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பண செழிப்பு கூடும். ஆனால், எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும். அரசியல்வாதிகள் மன மகிழ்ச்சியோடு இருப்பர். மாணவர்கள் கல்வியில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். விவசாயிகள் அதிக செலவு பிடிக்கும் பயிர்களைத் தவிர்ப்பது நல்லது. புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்கவும். செவ்வாயால் பொருள் களவு ஏற்பட வாய்ப்புண்டு. அரசு வகையில் சாதகமான போக்கு காணப்படவில்லை. பெண்கள் பிள்ளைகளால் முன்னேற்றம் காணலாம். புத்தாடை, நகை வாங்கலாம். மாத இறுதியில் பண வரவு இருக்கும். உடல்நிலையில் சிறு கோளாறுகள் ஏற்பட்டு சரியாகும்.
நல்ல நாள்: ஜூன் 16,17,18,19,24,25,26,27,28 ஜூலை 2,3,6, 7,813,14,15,16
கவன நாள்: ஜூன் 20,21 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1,7 நிறம்: செந்தூரம், பச்சை
வழிபாடு: மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுங்கள். கேது சாதகமற்ற இடத்தில் இருப்பதால் விநாயகர், துர்க்கை வழிபாடு நடத்துங்கள். ஜூன்18க்குப் பிறகு வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கும், லட்சுமிக்கும் அர்ச்சனை செய்யுங்கள். வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள்.