பதிவு செய்த நாள்
16
ஜூன்
2014
09:06
இந்த மாதம் சூரியன்,குரு, நற்பலனை கொடுப்பார்கள். புதன் ஜூலை 4ல் இடம்மாறி நன்மை தருவார். சுக்கிரன் ஜூலை14 வரை நற்பலன் அளிப்பார். மற்ற கிரகங்கள் சாதகமற்ற நிலையில் உள்ளன. குருவின் 7,9-ம் பார்வை மூலம் பிரச்னை அனைத்தும் நீங்கும். ராகு ஜூன் 21ல் உங்கள் ராசிக்கு வருகிறார். அவரால் வீண் அலைச்சல் ஏற்படலாம். கேது இதுவரை உடல் உபாதை தந்திருக்கலாம். ஜூன் 21ல் 7-ம் இடமான மீனத்துக்கு வருகிறார். மனைவி வகையில் பிரச்னையும், அலைச்சலும் ஏற்படும். சூரியன், குருவால் நினைத்தது எளிதில் நிறைவேறும். முயற்சியில் இருந்த தடை அகலும். முக்கிய பொறுப்புகளை பெண்கள் வசம் ஒப்படைப்பது சிறப்பை தரும். பெண்களால் நற்சுகம் கிடைக்கும். பொன் பொருள் சேரும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் Œந்@தாஷம் நிலைக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். தொழில், வியாபாரத்தில் பெண்களை பங்குதாரராக கொண்டவர்கள் அதிக வருவாயைப் பெறுவர். கடந்த காலத்தில் ஏற்பட்ட பண விரயம் ஜூலை 4 க்கு பிறகு ஏற்படாது. ஜூலை 14க்கு பிறகு எதிரிகளால் தொல்லை ஏற்படும்.பணியாளர்களுக்கு புதனால் ஜூலை 4 வரை சிரமம் நேரிட வாய்ப்புண்டு. சிலர் வீண் பொல்லாப்பை சந்திப்பர். விட்டுக் கொடுத்து போகவும். திடீர் செலவால் பணம் விரயமாகும். அதன்பின் கோரிக்கை நிறைவேறும். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். கலைஞர்கள் மன மகிழ்ச்சியோடு காணப்படுவர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகள் எதிர் பார்த்த முன்னேற்றம் காணலாம்.
மாணவர்களுக்கு சிறப்பான பலன் உண்டாகும். ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்பது சிறப்பைத் தரும். ஜூலை 4-ந் தேதிக்கு பிறகு புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி காணலாம்.விவசாயிகளுக்கு பழம், கிழங்கு வகைகள், நிலக்கடலை போன்ற பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும். பெண்களுக்கு குடும்ப வாழ்வு சிறப்பாக அமையும். ஜூலை 9,10 ஆடை, அணிகலன் வாங்குவீர்கள். உடல் நலம் சுமாராக இருக்கும்.
நல்ல நாள்: ஜூன்18,19,20,21,27,28,29,30 ஜூலை 1,4,5,9,10,15,16
கவன நாள்: ஜூன் 22,23 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3,9 நிறம்: செந்தூரம், மஞ்சள்
வழிபாடு: ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை, விநாயகரை வணங்கி வாருங்கள். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்துங்கள். மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.