பதிவு செய்த நாள்
16
ஜூன்
2014
09:06
முக்கிய கிரகங்களில் எதுவுமே சாதகமாக காணப்படவில்லை. இருந்தாலும் கேது, புதன் ஆகிய இருவராலும் நன்மை உண்டாகும். சுக்கிரன் சாதகமற்று இருந்தாலும் ஜூன் 18ல் இருந்து நன்மை தருவார். இது தவிர குருவின் 5ம் பார்வை சாதகமாக அமைந்துள்ளது. அதன் மூலம் எந்த தடையையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். கேது ஜூன் 21ல் 6-ம் இடமான மீனத்திற்கு வருவதால் பின்தங்கிய நிலை அடியோடு மறையும். பொன், பொருள் தாராளமாக கிடைக்கும். செயலில் வெற்றி உண்டாகும். ராகு ராசியில் இருந்து உறவினர் வகையில் பிரச்னையை உருவாக்கி இருக்கலாம். ஜூன் 21ல் அவர் இடம்மாறி 12 ம் இடத்திற்கு மாறி இருப்பதால் பொருள் விரயத்தை கொடுக்க வாய்ப்புண்டு. சூரியனால் வீண் பொல்லாப்பைச் சந்திக்கலாம். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். ஜூலை 4க்குப் பிறகு வீண் விவாதத்தை தவிர்க்கவும். சுக்கிரனால் பெண்களின் ஆதரவு கிடைக்கும். தம்பதியர் இடையே ஒற்றுமை மேம்படும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத வகையில் அதிர்ஷ்ட வாய்ப்பின் மூலம் வருமானம் அதிகரிக்கும். மறைமுக எதிரிகளை இனம் கண்டு ஒதுங்குவீர்கள். வெளியூர் பயணத்தால் நன்மை உண்டாகும். பணியாளர்களுக்கு கடந்த மாதம் பெண்களால் ஏற்பட்ட பிரச்னை அனைத்தும் ஜூன்18க்குப் பிறகு அடியோடு விலகும். ஜூன் 29,30 ஜூலை 1-ந் தேதிகளில் உங்களின் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். கலைஞர்கள் மாத தொடக்கத்தில் தீவிர முயற்சியின் பேரில் தான் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். ஜுன்18க்குப் பிறகு, சுக்கிரனின் பலத்தால் முன்னேற்றம் காணலாம். அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் கவுரவத்தோடு காணப்படுவர். உங்கள் வளர்ச்சிக்கு ஒரு பெண் பின்னணியாக இருப்பார். மாணவர்களுக்கு தேர்வில் எதிர்பார்த்த மார்க் கிடைக்கும். விவசாயிகள் மானாவாரி பயிர்களில் அதிக மகசூல் காணலாம். பசு வளர்ப்பில் நல்ல வருவாய் கிடைக்கும். பெண்கள் ஆடை, நகை வாங்குவர். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். உடல்நலனில் கவனம் தேவை.
நல்ல நாள்: ஜூன்15,20,21,22,23,29,30, ஜூலை1,2,3,6,7, 8,11,12
கவன நாள்: ஜூன் 24,25,26 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 4,8 நிறம்: வெள்ளை, பச்சை
வழிபாடு: தினமும் வீட்டில் விளக்கு ஏற்றி முருகனை வழிபடுங்கள். ராகு சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அவருக்கு உளுந்து படைத்து அர்ச்சனை செய்யுங்கள். மாரியம்மனை வழிபடுங்கள். ராகு காலத்தில் பைரவர் பூஜை செய்யலாம்.