பதிவு செய்த நாள்
16
ஜூன்
2014
09:06
இம்மாதம் செவ்வாய், குரு நன்மை தருவார்கள். புதன் ஜூலை 4க்கு பிறகும், சுக்கிரன் ஜூலை 14க்கு பிறகும் நன்மை தருவார்கள்.ராகு ஜூன்21ல், உங்கள் ராசிக்கு 11-ம் இடமான கன்னிக்கு செல்வதால் இதுவரை இருந்துவந்த பிரச்னை இனி இருக்காது. பொருளாதாரத்தில் நல்ல வளத்தை தருவார். பெண்களால் அனுகூலம் கிடைக்கும். கேது ஜூன்21ல், 5-ம் இடமான மீனத்திற்கு வந்துள்ளார். இந்த இடத்தில் அவர்அரசு வகையில் சிற்சில பிரச்னைகளைத் தரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வசதிகள் பெருகும்.உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. புதனால், ஜூலை 4வரை கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு வரலாம். விட்டுக்கொடுத்து போகவும். ஜூலை 4க்கு பிறகு உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். பணியாளர்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். உழைப்புக்கு தகுந்த வருவாய் கிடைக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலை அடைவர். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணலாம். சூரியன் சாதகமற்ற நிலையில் இருப்பதால், அரசு வகையில் அனுகூலம் இல்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். பெண்கள் வகையில் இருந்து வந்த தொல்லைகள் மாதக் கடைசியில் மறையும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும். விவசாயி
களுக்கு எள், கரும்பு, பனை மூலம் வருவாய் அதிகம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் பெண்களுக்கு குடும்பம் தழைத்து ஓங்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள். நகை, புத்தாடை வாங்கலாம். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
நல்ல நாள்: ஜூன்16,17,22,23,24,25,26, ஜூலை2,3,4,5,9, 10,13,14.
கவன நாள்: ஜூன்27, 28 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 2,3 நிறம்: சிவப்பு, மஞ்சள்
வழிபாடு: தினமும் காலையில் சூரியனை வழிபடவும். புதன் கிழமை குல தெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு பசுந்தழை போடுங்கள். வெள்ளிக்கிழமை முருகனுக்கும், சுக்கிரனுக்கும், அர்ச்சனை செய்யுங்கள்.