பதிவு செய்த நாள்
16
ஜூன்
2014
10:06
இந்த மாதம் சனிபகவானின் நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். ஜூன்18 வரை சுக்கிரனும், ஜூலை4 வரை புதனும் நன்மை தருவார்கள். இதுவரை 11-ம் இடமான துலாம் ராசியில் இருந்த ராகு ஜூன்21ல் 10-ம் இடமான கன்னிக்கு மாறுகிறார். இங்கு அவர் பொருள் இழப்பையும், சிறு சிறு உடல் உபாதைகளையும் கொடுப்பார். கேது இதுவரை மேஷ ராசியில் அதாவது 5-ம் இடத்தில் இருந்தார். அங்கு இருந்த அவர் பிள்ளைகளால் பிரச்னையை தந்து இருக்கலாம். ஜூன்21ல், 4-ம் இடமான மீனத்திற்கு வருகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. அவரால் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். உடல் நலம் பாதிப்பு வரலாம். ஜூலை 4க்கு பிறகு புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் கணவன்- மனைவி இடையே சிற்சில கருத்து வேறுபாடு வரலாம். விட்டுக் கொடுத்து போகவும். ஜூன் 15, ஜூலை 11,12ல் பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பார்கள். பணியாளர்கள் பதவி உயர்வு காண்பர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். ஜூலை 4க்கு பிறகு வேலைப்பளுவும் அலைச்சலும் இருக்கும் என்றாலும் குருவின் பார்வையால் திருப்தி காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டு எனினும், போட்டியாளர்களால் தொல்லை ஏற்படும். பயணங்கள் அனுகூலமாக இருக்கும். கலைஞர்கள் கடும் முயற்சியின் பேரிலேயே ஒப்பந்தங்களைப் பெற வேண்டியிருக்கும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பலனை பெறலாம். பணப்புழக்கத்திற்கும் குறை இருக்காது. மாணவர்களின் வளர்ச்சி ஏறுமுகமாக இருக்கும். அதே நேரம் சற்று சிரத்தை எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். விவசாயத்தில் பசு வகையில் அதிக வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க அனுகூலம் இல்லை. பெண்கள் கணவரிடம் விட்டுக் கொடுத்து போகவும். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. சூரியனால்அலைச்சல் அதிகரிக்கும். பயணத்தின் போது கவனம் தேவை.
நல்ல நாள்: ஜூன் 15,18,19,24,25,26,27,28, ஜூலை 4,5,6,7,8,11,12,15,16.
கவனநாள்: ஜூன் 28,30, ஜூலை 1 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 5,6 நிறம்: பச்சை, கருப்பு
வழிபாடு: வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்யுங்கள். அதிகாலையில் குளித்து சூரிய வழிபாடு நடத்துங்கள். பத்திரகாளி அம்மனுக்கு எலுமிச்சை மாலை சூட்டுங்கள். பைரவரை வழிபடுங்கள்.