பதிவு செய்த நாள்
16
ஜூன்
2014
10:06
சூரியன், குரு மாதம் முழுவதும் நற்பலனைக் கொடுப்பார்கள். மேலும், சுக்கிரன் ஜூலை 14 வரையும், புதன் ஜூலை 4க்கு பிறகும் நன்மை தருவர். குருவின் 5-ம் இடத்துப்பார்வையும் சிறப்பாக அமைந்துள்ளது. கேது ஜூன் 21ல் 3-ம் இடமான மீனத்துக்கு வந்து பல்வேறு நன்மைகளைத் தருவார். ராகு ஜூன் 21ல், 9-ம் இடமான கன்னிக்கு மாறுவது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆனால், பலாபலன்கள் மாறுபடும். உங்கள் திறமையில் இருந்த பின்தங்கிய நிலை இனி இருக்காது. ஆனால், செயல்பாடுகளில் சிற்சில தடைகள் உருவாகலாம். குரு குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியை தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற பல வசதிகள் கிடைக்கும். அத்தியாவசிய தேவைகள் கிடைக்க எந்த தடையும் இல்லை. தம்பதியினர் இடையே மகிழ்ச்சி ஏற்படும். அதே நேரம் செவ்வாய் சாதகமாக இல்லாததால் பொருள் நஷ்டம் வரலாம். மாதத் தொடக்கத்தில் உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர்.பணியாளர்களுக்கு பணியில் மதிப்பு அதிகரிக்கும். வேலைப்பளு குறையும். ஜூலை 4க்கு பிறகு பதவி உயர்வு காண்பர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பயண பீதி இருக்காது.தொழில், வியாபாரத்தில் சூரியனால் பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். பொருளாதார வளம் கூடும். புதிய வியாபாரம் அனுகூலத்தை கொடுக்கும். ஜூன் 27,28ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். ஜூலை 4க்கு பிறகு தொழில் ரீதியாக பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர்.கலைஞர்களுக்கு எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்கும்.மாத இறுதியில் முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். அரசியல்வாதிகள் சீரான நிலையில் இருப்பர். மாணவர்களுக்கு, இந்த நல்ல மாதத்தை பயன்படுத்தி முன்னேறுவது உங்கள் கையில் தான் உள்ளது. விவசாயிகளுக்கு புதிய சொத்து வாங்கும் யோகம் வரும். பெண்கள் விருந்து விழா என சென்று வருவார்கள். புத்தாடை, நகை வாங்கலாம்.
நல்ல நாள்: ஜூன் 16,17,20,21,27,28,29,30, ஜூலை 1,6,7,8,9,10,13,14.
கவன நாள்: ஜூலை 2,3.
அதிர்ஷ்ட எண்: 3,7 நிறம்: செந்தூரம், மஞ்சள்
வழிபாடு: சனிக்கிழமை பெருமாளையும், ஆஞ்சநேயரையும், செவ்வாயன்று முருகனையும் வழிபடுங்கள். ஏழை மாணவர்களுக்கு உதவி செய்யுங்கள்.