வீரட்டானேஸ்வரர் கோவிலில் வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூன் 2014 11:06
பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பஞ்சமி தினத்தையொட்டி, கோவிலில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும், 1008 சகஸ்ரநாம அர்ச்சனையும், தீபாராதனையும் நடந்தது. விழாவில் வராகி வார வழிபாட்டு மன்றம் சார்பில் ஏராளமான பெண்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.