சுவர்ணபுரீஸ்வரர் கோவிலில் 21ம் தேதி ராகு, கேது பெயர்ச்சி விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூன் 2014 12:06
நெட்டப்பாக்கம்: நல்லாத்தூர் சுவர்ணபுரீஸ்வரர் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா, வரும் 21ம் தேதி நடக்கிறது. ஏம்பலம் அடுத்த நல்லாத்தூர் கிராமத்தில் சுவர்ணபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, வரும் 21ம் தேதி காலை 8.30 மணிக்கு சொர்ணபுரீஸ்வர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து 11.12 மணிக்கு ராகு பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும், கேது பகவான் மேஷம் ராசியில் இருந்து மீன ராசிக்கு பிரவேசிப்பதால், பரிகார பலன் மற்றும் பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை நல்லாத்தூர் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.