விருத்தாசலம்: தூய அந்தோணியார் ஆலய தேர் திருவிழாவில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். விருத்தாசலம் ஆலடிரோடு தூய அந்தோணியார் ஆலய தேர் திருவிழா, கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு திருப்பலி பூஜை நடந்தது. நேற்று முன்தினம் தேர் திருவிழாவையொட்டி காலை 7:30 மணிக்கு பங்கு தந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி, இரவு 7:00 மணிக்கு தேர்பவனி நடந்தது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேர்களில் குழந்தை ஏசு, தூய அந்தோணியார் ஊர்வலம் வந்து அருள்பாலித்தனர். ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.