பதிவு செய்த நாள்
19
ஜூன்
2014
12:06
ஈரோடு: ஈரோடு கள்ளுக்கடை மேடு, கொண்டத்து பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ஈரோடு, கள்ளுக்கடைமேடு கொண்டத்து பத்ரகாளியம்மன் கோவிலில், திருப்பணிகள் நடந்தது, கும்பாபிஷேக பூஜைகள், கடந்த, 16ம் தேதி காலை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், தன லட்சுமி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, யாக பூஜைகள் நடந்தது. நேற்று காலை மங்கள இசை, விநாயகர் பூஜை, புண்யாகம், நான்காம் யாக பூஜை, நாடி சந்தானம், யாத்ரா தானத்தை தொடர்ந்து, கொண்டத்து காளியம்மன் விமான கோபுர கும்பாபிஷேகம் நடந்தது. ன், கொண்டத்து பத்ர காளியம்மன் மூலவர் மற்றும் அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும், கும்பாபிஷேகம் நடந்தது. மஹா அபிஷேகம், தச தரிசனம், தீபாராதனை, பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கும்பாபிஷேகத்தில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, மண்டல பூஜைகள் நடக்க உள்ளது.