பதிவு செய்த நாள்
20
ஜூன்
2014
12:06
லக்னோ: உ.பி., மாநிலம், எடா மாவட்டத்தை சேர்ந்தவர்கள், அசான், ஆர்த்தி. வெவ்வேறு மதங்களை சேர்ந்த இருவரும், காதலித்தனர். இவர்களின் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள், அவாகர் என்ற இடத்தில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு வந்து, திருமணம் செய்ய முடிவெடுத்தனர். ஆனால், அவர்களின் பெற்றோர், அங்கும் வந்து விட்டனர். இருதரப்புக்கும் இடையே, கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, பின், சமரசத்துக்கு வந்தனர். இதையடுத்து, மணமகன் முஸ்லிம் என்பதால், அந்த மத வழக்கப்படி, இருவருக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. சாய்பாபா கோவிலிலேயே, இந்த திருமணம் நடந்தது, அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.