சாத்தூர் : சாத்தூர் இயேசுவின் திருஇருதய ஆலய விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள இந்த ஆலய விழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. தேர்பவனி 21 இரவு மற்றும் 22ம்தேதி காலையில் நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 8 மணிக்கு சிறப்பு கூட்டுத்திருபலி மற்றும் புது நன்மை சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. மாலையில் கொடியிறக்கத்துடன் முடிவடைகிறது. ஏற்பாடுகளை பாதிரியார் சேவியர்ராஜ், பங்குபேரவையினர் செய்துள்ளனர்.