திருக்கழுக்குன்றம் : பெரியகாட்டுப்பாக்கம் சோலைவாழியம்மன் கோவில் திருவிழா, நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்றது. திருக்கழுக்குன்றம் அடுத்த, பெரியகாட்டுப்பாக்கம் கிராமத்தில் சோலைவாழியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், ஆனி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். 32ம் ஆண்டு திருவிழா கடந்த 16ம் தேதி துவங்கியது. காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.17ம் தேதி கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், நேற்று முன்தினம் காலை, மாலை இருவேளையும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. கிராம மக்கள் ஊருணி பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர். இரவு அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.