புதுச்சேரி: இதய ஆண்டவர் பசிலிக்கா ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. புதுச்சேரி ரயில் நிலையம் அருகிலுள்ள தூய இதய ஆண்டவர் பசிலிக்கா ஆண்டு பெருவிழா நேற்று துவங்கியது. இதையொட்டி, நேற்று காலை 5.30 மணியளவில் கொடியேற்றம் நடந்தது. இதில் முதன்மை குரு அருளானந்தம் கலந்து கொண்டார். தொடர்ந்து, காலை மாற்றும் மாலையில் திருப்பலி நிகழ்ச்சிகள் நடக்கிறது. 29ம் தேதி மாலை 6;30 மணியளவில், பெரிய தேர்பவனி நடக்கிறது. 30ம் தேதி காலை திருப்பலிக்கு பிறகு கொடியிறக்கம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இதய ஆண்டவர் ஆலயத்தின் பாதிரியார் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.