காரைக்கால்: காரைக்கால் மாங்கனி திருவிழா கடை, ரூ.19.80 லட்சத்திற்கு ஏலம் போனது. காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனி திருவிழா 12ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, ஜூலை 10ம் தேதி மாப்பிள்ளை அழைப்பு, 11ம் தேதி திருக்கல்யாணம், 12ம் தேதி மாங்கனி வீசும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவையொட்டி, கோவில் நிர்வாகம் சார்பில், வியாபார கடைகள் ஏலம் விடப்பட்டது. நிர்வாக அதிகாரி ராஜராஜன்வீரசாமி தலைமையில் நடந்த ஏலத்தில், ரூ.19 லட்சத்து 80 ஆயிரத்திற்கு கடைகள் ஏலம் போனது. கடந்த ஆண்டைவிட இந்த ஏலத்தோகை, ரூ.10 லட்சத்து 80 ஆயிரம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.