Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மனசிருக்கணும் ம பச்சை பிள்ளையாட்டம்! கடனைப் போக்கும் ஆகாச தீபம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அ வில் ஆரம்பிக்கும் ராமாயணக் கதை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2014
03:06

அ என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது ராமாயணக்கதை இது.

அனந்தனே அசுரர்களை அழித்து,
அன்பர்களுக்கு அருள அயோத்தி
அரசனாக அவதரித்தான்

அப்போது அரிக்கு அரணாக அரசனின்
அம்சமாக அனுமனும் அவதரித்ததாக
அறிகிறோம். அன்று அஞ்சனை அவனிக்கு
அளித்த அன்பளிப்பு அல்லவா அனுமன்? அவனே அறிவழகன், அன்பழகன்,
அன்பர்களை அரவணைத்து அருளும் அருட்செல்வன்!

அயோத்தி அடலேறு, அம்மிதிலை அரசவையில்

அரசனின் அரிய வில்லை அடக்கி, அன்பும்
அடக்கமும் அங்கங்களாக அமைந்த அழகியை அடைந்தான்.

அரியணையில் அமரும் அருகதை அண்ணனாகிய
அனந்த ராமனுக்கே! அப்படியிருக்க அந்தோ!
அக்கைகேயி அசூயையால் அயோத்தி அரசனுக்கும்
அடங்காமல் அநியாயமாக அவனை அரண்யத்துக்கு அனுப்பினான்.

அங்கேயும் அபாயம்! அரக்கர்களின் அரசன்,
அன்னையின் அழகால் அறிவிழந்து அபலையை அபகரித்தான்.
அத்தசமுகனின் அக்கிரமங்களுக்கு, அட்டூழியங்களுக்கு
அளவேயில்லை. அயோத்தி அண்ணல், அன்னை
அங்கிருந்து அகன்றதால் அடைந்த அவதிக்கும் அளவில்லை.

அத்தருணத்தில் அனுமனும் அனைவரும் அரியை
அடிபணிந்து, அவனையே அடைக்கலமாக அடைந்தனர்.
அந்த அடியார்களில் அருகதையுள்ள அன்பனை
அரசனாக அரியணையில் அமர்த்தினர்.

அடுத்து அன்னைக்காக அவ்வானரர் அனைவரும்
அவனியில் அங்குமிங்கும் அலைந்தனர். அலசினர்.
அனுமன், அலைகடலை அலட்சியமாக அடியெடுத்து
அளந்து அக்கரையை அடைந்தான்.

அசோகமரத்தின் அடியில், அரக்கிகள் அயர்ந்திருக்க
அன்னையை அடி பணிந்து அண்ணலின்
அடையாளமாகிய அக்கணையாழியை அவளிடம் அளித்தான்.

அன்னை அனுபவித்த அளவற்ற அவதிகள்
அநேகமாக அணைந்தன. அன்னையின்
அன்பையும்
அருளாசியையும் அக்கணமே அடைந்தான் அனுமன்.

அடுத்து அரக்கர்களை அலறடித்து, அவர்களின்
அரண்களை, அகந்தைகளை அடியோடு
அக்கினியால்
அழித்த அனுமனின் அட்டகாசம், அசாத்தியமான அதிசாகசம்
அனந்தராமன் அலைகடலின் அதிபதியை
அடக்கி, அதிசயமான அணையை
அமைத்து, அக்கரையை அடைந்தான்.

அரக்கன் அத்தசமுகனை அமரில் அயனின்
அஸ்திரத்தால் அழித்தான்.
அக்கினியில் அயராமல் அர்ப்பணித்த அன்னை
அவள் அதி அற்புதமாய் அண்ணலை அடைந்தாள்.

அன்னையுடன் அயோத்தியை அடைந்து
அரியணையில் அமர்ந்து அருளினான்.

அண்ணல், அனந்தராமனின் அவதார
அருங்கதை அகரத்திலேயே அடுக்கடுக்காக
அமைந்ததும் அனுமனின் அருளாலே!

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar