கூம்பூர் : கூம்பூர் ஊராட்சி ஆட்டுக்காரன்பட்டி காளியம்மன் கோயில் உற்சவ விழா நடந்தது. கரகம் பாலித்தல், மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. காலை 7 முதல் மாலை 5 மணி வரை அன்னதானம் நடந்தது. மாலையில் பொங்கல் அபிஷேகத்தை தொடர்ந்து, கிருஷ்ணலீலா புராண நாடகம் நடைபெற்றது. குள்ளம்பட்டி, ஆட்டுக்காரன்பட்டி உள்ளிட்ட சுற்றுப்பகுதி கிராமமக்கள் பங்கேற்றனர்.