கன்னிவாடி : கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில், பிரதோஷ விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு விசேஷ அபிஷேகத்துடன், மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிறப்பு பூஜையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், மல்லீஸ்வரர் கோயில், வெல்லம்பட்டி மாரிமுத்து சுவாமி கோயிலில், பிரதோஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. திண்டுக்கல் என். எஸ்., நகர் ஹரிஓம் சிவசக்தி விநாயகர் கோயி லில் பிரதோஷம், கார்த் திகையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய் தனர்.