கடலூர்: கடலூர், புதுப்பாளையத்தில் ஞானசபை திறப்பு விழா நடந்தது. கடலூர், புதுப்பாளையம் கழுத்து மாரியம்மன் கோவிலையொட்டி உள்ள, ஞானசபையில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவையொட்டி நேற்று காலை 7:00 மணிக்கு அரசு இசைப் பள்ளி மாணவர்களின் நாதஸ்வர தவில் இசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, சமரச சுத்த சன்மார்க்க சத்திய யோகசாலை நிறுவனர் சாது சிவராமனார், ஞானசபையை திறந்து வைத்து, சத்தியஞான தீபம் ஏற்றினார். குருபக்கிரிசாமி, எம்பெருமான், சிவநேசன், சேகர் ஆகியோர் அகவல் படித்தனர். பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.