பதிவு செய்த நாள்
04
ஜூலை
2014
04:07
இந்து சமயத்தின்படி, கை கூப்பி வணங்குவதில் ஓர் அறிவியல் உண்மை உள்ளது. வலது கை, உங்களது வலது பக்க மூளைத் திறனை-அறிவைக் குறிக்கிறது. இடது கை, இடப்பக்கமுள்ள இதயத்தை உங்கள் அன்பைக் காட்டுகிறது. வணங்கும்போது, இறைவா, நான் உன்னை மனப்பூர்வமாகவும், அறிவு பூர்வமாகவும் வணங்குகிறேன். மனம், மெய், புத்தி ஆகியவை ஒருங்கிணைந்த ஒரு இன்டிகிரேட்டட் பெர்சனாலிட்டி ஆக நான் உன் முன் நிற்கிறேன். இறைவா, நான் இப்படி சமுதாயத்தின் முன்பும் நிற்பதற்கு அருள்வாய். ஒருவரை நீங்கள் வணங்கும்போது, நான் மனம், மெய், புத்தியில் திடமானவன், பலவீனன் அல்ல என்பதை அவருக்கு அறிவிக்கும் விதத்தில் அவ்வாறு செய்கிறீர்கள்.